'இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனை'...82 வருடத்திற்கு பின்பு தகர்த்த சுழற்பந்து வீச்சாளர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 07, 2018 03:45 PM
Pakistan\'s Yasir Shah becomes fastest bowler to 200 Test wickets

மிக விரைவாக 200 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை,பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா படைத்துள்ளார்.

 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.

 

தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, நியூசிலாந்து அணியின் சோமர்வில்லேவை அவுட்டாக்கி, டெஸ்ட் போட்டிகளில் தனது 200 விக்கெட்டைப் பதிவு செய்தார்.இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.அதோடு சுமார் 82 ஆண்டு கால சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் கிலேரி ஃகிரிம்மெட் கடந்த 1936-ம் ஆண்டு தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. இதை தற்போது யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.

 

மிக குறுகிய காலத்தில்,பாகிஸ்தான் அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் யாஷிர் ஷா.

Tags : #PAKISTAN #CRICKET #YASIR SHAH #200 TEST WICKETS