ஏன்?...எதுக்கு?...நீங்க ஏன் இவ்ளோ ஆவேசப்பட்டிங்க!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 07, 2018 02:33 PM
Virat Kohli\'s fiery celebration video goes viral

ஆஸ்திரேலியவிற்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசிய பந்தில்,ஆஸ்திரேலிய வீரர் பின்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.அப்போது கோலி ஆக்ரோஷமாக துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் யாரும் தங்களின் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.ஆனால் புஜாரா மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக (123) சதம் அடித்து வெளியேறினார்.

 

இதையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில்,பின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக ஆட்டத்தை தொடங்கினர்.அப்போது ஆட்டம் துவங்கிய மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச் ஸ்டெம்புகள் சிதற இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். பந்தை தவறாக கணித்த பின்ச் இன் சைடு எட்ஜ் ஆகி போல்டானார். பின்ச் செய்வதறியாமல் திகைக்க கோலி துள்ளிக்குதித்து கொண்டாடினார். ஆஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் விக்கெட்டுக்கு கோலியின் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #ISHANT SHARMA #AARON FINCH