சட்டெனப் பறந்து 'கோலி'யைக் காலி செய்த கவாஜா... ஷாக் 'வீடியோ' உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 06, 2018 10:47 AM
USMAN KHAWAJA TOOK A ONE-HANDED CATCH DISMISS KOHLI video goes viral

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி,கோப்பையை வெல்லும் நோக்கில் நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்யை ’ தேர்வு செய்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்காத ரோஹித் சர்மா,இம்முறை அணியில் அணியில் இடம் பிடித்திருந்தார்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது.விராட் கோலி இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் உட்பட டாப் ஆர்டர் வீரர்கள் தளர்வான ஷாட்களினால் வெளியேற உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் என்று தடுமாறியது.

 

இந்நிலையில் கேப்டன் கோலி அவுட் ஆன விதம் ரசிகர்களை அதிகமாக கடுப்பேற்றியது.விராட் கோலி  வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆடும் பழக்கத்தை விட முடியாமல் அடித்தார்.இதனால் பந்து எட்ஜ் ஆகி கவாஜாவுக்கு இடது புறம் நல்ல வேகமாகச் சென்றது.உடனே சுதாரித்து கொண்ட அவர்,பாய்ந்து சென்று  ஒரு கையில் பிடித்தார்.கவாஜாவின் அற்புதமான  கேட்சில் 3 ரன்களில் கோலி வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.

Tags : #VIRATKOHLI #USMAN KHAWAJA #ADELAIDE #AUSTRALIA