'சேவாக், சச்சினுடன் விளையாட மாட்டேன்'... தோனியை விளாசிய கம்பீர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 10, 2018 11:33 AM
Gautam Gambhir criticises MS Dhoni\'s Captaincy during 2012

சேவாக், சச்சின், கம்பீருடன் சேர்ந்து விளையாட மாட்டேன் என்று தோனி சொன்னதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,''2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிபி சீரிஸ் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் சச்சின், சேவாக், தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் 3-வது வீரராகவும் களம் இறங்கினேன். சச்சின், சேவாக் குறைவாக ரன் எடுக்கிறார்கள்,எனக்கூறி அவர்களுடன் என்னையும் ஓரம்கட்ட தோனி முடிவு செய்தார்.

 

தொடர்ந்து  சேவாக்குடனும், சச்சினுடன் இனிமேல் கம்பீரை விளையாட அனுமதிக்க முடியாது. நானும் 3 பேருடன் விளையாட முடியாது என்று தோனி கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.தொடக்கத்தில் நாங்கள் 3 பேரும் ஒன்றாக விளையாடவில்லை. எங்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில் எங்கள் 3 பேருடன் தோனி விளையாட முன்வருவார்.

 

எங்கள் 3 பேருடன் விளையாடமாட்டேன் என்று தோனி முதலில்  முடிவெடுத்தார். அதன்பின், எங்கள் 3 பேருடன் சேர்ந்து விளையாட முடிவு செய்தார். இதில் இருந்து தோனி முதலில் எடுத்த உண்மையான முடிவு தவறானதா அல்லது 2-வது எடுத்த முடிவு தவறானதா. கேப்டனாக தோனி முடிவெடுத்தார். ஆனால், அணியில் வீரர்களாக இருக்கும் எங்கள் 3 பேருக்கும் அவரின் முடிவு  பேரதிர்ச்சியாக இருந்தது,'' என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்