'பேட்டிங்ல சொதப்பினாலும்,டான்ஸ்ல சொதப்பல'....நம்ம கேப்டன்:வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 08, 2018 11:25 AM
Virat Kohli shows off his dance moves at Adelaide video goes viral

ஆஸ்திரேலியவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது,இந்திய கேப்டன் கோலி ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.

 

இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,மூன்றாம் நாள் ஆட்டமானது தொடங்கியது.முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிந்திருந்த நிலையில்,மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானத்தை கடைபிடித்தனர்.அவ்வப்போது மழையின் குறுக்கீடு இருந்த போதும் போட்டியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த இந்திய கேப்டன் கோலி,மைதானத்தில் இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்றவாறு நடனமாடி அசத்தினார்.இது அங்கிருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.கோலியின் நடனத்தை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து கோலியை உற்சாகப்படுத்தினார்கள்.இந்நிலையில் இதனை குறித்து,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ''விராட் இதை நேசிக்கிறார்'' என்று பதிவிட்டிருந்தது.

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #IND VS AUS #ADELAIDE