விராட் கோலிக்கு ஒரு நியாயம்?.. எங்களுக்கு ஒரு நியாயமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 08, 2018 09:50 PM
#AusVsInd: Australia Coach Slams Kohli\'s On-Field Antics

விராட் கோலிக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? என ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் ஸ்டெம்புகள் சிதற கிளீன் போல்ட் ஆனார். இஷாந்த் சர்மாவின் துல்லிய பந்துவீச்சில் அவர் அவுட் ஆனபோது கேப்டன் கோலி மிகவும் ஆக்ரோஷமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

விராட் கோலி இவ்வாறு செய்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் கோச் ஜஸ்டின் லங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்ததுபோல் எங்கள் வீரர்கள் நடந்துகொண்டால், உலகிலேயே மிக மோசமானவர்கள் போல் நாங்கள் சித்தரிக்கப்பட்டு இருப்போம். நீங்கள் செய்யும்போது அதை விளையாட்டின் மீதுள்ள பேஷன் என்று சொல்கிறீர்கள்,'' என தெரிவித்துள்ளார்.