இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட 'ஹீரோ' இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 08, 2018 07:58 PM
Pa Ranjith Neelam Productions next with Attakathi Dinesh

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக 'பிர்சா முண்டா' என்னும் படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இந்தியில் இயக்கவுள்ளார்.

 

இந்த நிலையில் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தான் தயாரிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பினை ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கும் இப்படத்தில் 'அட்டக்கத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

 

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சித் முதன்முறையாக தயாரித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #PA.RANJITH