'எவ்வளவு ட்ரிக்ஸா யோசிக்கிறாரு'....அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை கடுப்பேத்த 'கோலி'யின் பிளான்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 10, 2018 10:36 PM
Stay longer in crease to frustrate Australia in next Test says Virat

ஆஸ்திரேலியவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் சாதிப்பதற்கு,கேப்டன் விராட் கோலி வித்தியாசமான ஐடியா ஒன்றை வைத்துள்ளார்.

 

அடிலெய்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில்,இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்திருக்கிறது.இந்த வெற்றியின் மூலம்,70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய வெற்றி பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.

 

இந்நிலையில்,ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியிலும் சாதிப்பதற்கு விராட் கோலி வித்தியாசமான ஐடியா ஒன்றை வைத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் "முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் போனதே ஆஸ்திரேலிய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்ற காரணமாக அமைந்தது.

 

அதனால் அடுத்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் களத்தில் நின்றால் போதும், ரன் எடுப்பது சுலபமாகிவிடும்.பந்து பழசாக பழசாக ரன்கள் சேர்ப்பது மிகவும் எளிதானது என கூறினார்.