'இந்த விஷயத்துல நான் ''தல'' அளவுக்கு இல்லீங்கோ'...கோலி ஓபன் டாக்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 10, 2018 09:31 PM
India vs Australia: Wouldn\'t say I was cool as ice, says Virat Kohli

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் பதட்டமான சூழ்நிலையில் ரொம்ப கூலாக இருந்தேன் என பொய் சொல்ல மாட்டேன் என,இந்திய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அபாரமான வெற்றியை பதிவு செய்ததோடு, சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பதட்டமான சூழ்நிலையில் ரொம்ப கூலாக இருந்தேன் என பொய் சொல்ல மாட்டேன்.’என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''கடைசி விக்கெட்டை கைப்பற்றவிடாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் போராடினார்கள்.

 

அவர்களின் கடுமையான போராட்டம் எங்களுக்கு,கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனால் நமது பவுலர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. 4 பவுலர்கள் 20 விக்கெட்டையும் கைப்பற்றியது, கண்டிப்பாக பெருமையான விஷயம்.இதற்கு முன்பாக இப்படி நடக்கவில்லை.’ என்றார்.

Tags : #VIRATKOHLI #MSDHONI #CRICKET #BCCI #INDIA VS AUSTRALIA