படபடப்பை விட எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கிறது.. ‘பாசிடிவ்’ கோலி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 13, 2018 02:26 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகிலேயே இந்த மைதானத்தின் பிட்ச்’சில் விளையாடும்போதுதான் பந்தின் வேகம் அதிகமாக இருக்கும். இதுவரை இந்திய அணி இதே மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, அவற்றுள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 

 

more excited than nervous with green, bouncy Perth pitch, says kohli

ஆஸ்திரேலியாவும் இதே மைதானத்தில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அவற்றுள் 25 போட்டிகளில் வெற்றி பெற்றது. 8 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இதே மைதானத்தில் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி வெள்ளி  அன்று 2வது டெஸ்ட் தொடர் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இதுபற்றி பேசியுள்ள விராட் கோலி, ‘இந்த மைதானத்தின் பசுமை போர்த்திய புல்வெளி எங்களுக்கு பாசிட்டிவாக அமையும்.முன்னதாக ஜோகன்ஸ்பெர்க்கில் விளையாண்டோம். இந்த முறை பவுலிங்கிற்குமான சிறந்த பிட்சாக இந்த பிட்ச் இருப்பதால் நாங்கள் படபடப்பை விட அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். 2012க்கு பிறகு தனிப்பட்ட முறையில் நான் இங்கு விளையாடவுள்ளேன் என்பது எனக்கு இன்னும் ஆர்வத்தை கூட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார். 

Tags : #AUSVIND #TEAMINDIA #VIRATKOHLI #CRICKET #BCCI