கடும் போட்டிக்கு நடுவே ரூ.2 கோடிக்கு டெல்லி அணி, கைப்பற்றிய இந்திய வீரர் இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 18, 2018 04:27 PM
IPL 2019 Auction goes in Rajasthan\'s Jaipur here is the details

வரும் 2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள  12வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிகழ்ந்துள்ளது. இதில் யுவராஜ் சிங், அக்ஸர் படேல் உள்ளிட்டோரின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், ஷான் மார்ஷ், மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகவும் இருக்கின்றன. மேற்கண்ட 10 வீரர்களில் இந்திய வீரர் ஒருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மொத்தமாக 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 123 வெளிநாட்டவர்களும், 228 இந்திய வீரர்களும் உட்பட தற்போது 351 வீரர்கள் உள்ளனர். முதலில் பஞ்சாப் அணியும், அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள, டெல்லி அணியும் முறையே 36.3 கோடி ரூபாயும், 35.5 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினால் 8.4 கோடி ரூபாயும் செலவிட இயலும்.

 

இந்நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக  விளையாடிய  இந்திய வீரர் ஹனும விகாரி்க்குதான் பலத்த போட்டி இருந்தது. அவரை வாங்க ரூ. 50 லட்சத்தில் தொடங்கி ரூ.2 கோடியில்  சென்று ஏலம் முடிந்தது. இதில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நிகழ்ந்த போட்டியைத் தாண்டி, டெல்லி அணி ஹனும விகாரியை கைப்பற்றியது. இதேபோல் பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹெட்மெயரை ரூ 4.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இவரே முதலில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஆவார். 

Tags : #IPLAUCTIONS #CRICKET #INDIA #IPL2019 #SHIMRON HETMYER #HANUMA VIHARI