'கோலியின் விக்கெட்டை விட,இந்த வீரரின் விக்கெட் தான் முக்கியம்'...அதான் ஜெயிச்சோம்:கடுப்பேற்றிய ஹசில்வுட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 18, 2018 03:16 PM
Not Kohli,Pujara is the prized wicket for Australia says Hazelwood

இந்திய கேப்டன் கோலியின் விக்கெட்டை விட,புஜாராவின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றியது தான் வெற்றிக்கு காரணம் என ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

 

அடிலெய்டில்நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்நிலையில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பெர்த்தில் நடைபெற்றது.இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி, 283 ரன்கள் எடுத்தது.அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

 

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில்,தடுமாற்றத்துடன் ஆடிய இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது.

 

இந்நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த  ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் "எங்களுக்கு கோலியின் விக்கெட்டை விட புஜாராவின் விக்கெட்டை கைப்பற்றுவது தான் முக்கியமான ஒன்றாக இருந்தது.ஏன் என்றால், புஜாரா களத்தில் நின்று விட்டால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.மேலும் இந்த தொடரில் அதிக பந்தை எதிர்கொண்டது அவர் தான். அதே போல ரகானே விக்கெட்டையும் விரைவாக கைப்பற்றியதும் வெற்றிக்கு காரணம்'' என தெரிவித்தார்.

Tags : #CRICKET #BCCI #VIRATKOHLI #CHETESHWAR PUJARA #JOSH HAZELWOOD