சாக்ஸை நுகர்ந்து பார்த்தவருக்கு நேர்ந்த கொடூர கதி.. அப்படி என்ன நடந்தது?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 18, 2018 02:53 PM
man sniffs his own socks, here is what happened

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் காலில் போடும் சாக்ஸினை நுகர்ந்து பார்த்ததால் அவருக்கு நிகழ்ந்துள்ள கொடூரம், சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு, பலரிடையே அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது. 

 

சீனாவின் ஃபியூஜன் பகுதியைச் சேர்ந்த இந்த சீன மனிதர், தினமும், தன் காலில் அணிந்து செல்லும் சாக்ஸை ஷூவை கழட்டியதும், நுகர்ந்து பார்த்துள்ளார். ஆனால் அவரது கால்களில் வியர்வை இருந்ததாலும், சரியாக சாக்ஸ் துவைக்கப்படாமல் இருந்ததாலும், சாக்ஸில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை நுகர்ந்து பார்த்த இவருக்கும் அந்த பூஞ்சைத் தொற்று தொற்றிக்கொண்டுள்ளது. 

 

இதனை அடுத்து அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. துவைக்காத சாக்ஸை பயன்படுத்துவதாலும், அதை நுகர்ந்து பார்த்தாலும் இந்த நபருக்கு உண்டான இந்த விளைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. #நெடுநாள்வாடை!

Tags : #SOCKS #MAN #VIRAL