‘அதுக்கு மொதல்ல நீங்க பேட்டிங் பண்ணனும் பெரிய தல’.. வார்த்தைகளால் மோதிய கேப்டன்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 18, 2018 11:14 AM
Virat Kohli\'s Verbal Battle With Tim Paine goes viral on air

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நிகழ்ந்த, பெர்த் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில், இந்தியாவின் கேப்டன் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையே நிகழ்ந்த அனல் பறக்கும் வாக்குவாதம், அனைவரிடையே பரவலாகி வருகிறது.

 

முந்தைய ஆட்ட முடிவில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ‘பெய்னை அவுட் ஆக்கிவிட்டால் அணியின் வெற்றி 2-0 என்கிற கணக்கில் உறுதியாகிவிடும்’ என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில், ‘அதற்கு முதலில் நீங்க பேட்டிங் பண்ணனும் பெரிய தல’ என்று பெய்ன் கூறியிருந்தார். இதை அடுத்து, அடுத்த நாள் போட்டியின்போது சிறிதாகத் தொடங்கிய வாக்குவாதம் ஓரிரு வார்த்தைகளில் முடிவுற்றாலும், அனல் பறக்கும் வாதமாகவே இருந்தது. 

 

முதலில் பேசிய பெய்ன், ‘நேற்று தோற்றது நீங்கள்தான்.. பிறகு ஏன் கூலாக இருக்கிறீர்கள் கோலி?’ என்று கேட்க, அதை கவனித்த அம்பயர் ‘ஓய்..போதும்.. போதும்..’ என்று வாதத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் பெய்னோ, ‘எங்களுக்கு பேச அனுமதி உள்ளது’ என்று கூறியுள்ளார்.  மீண்டும் அம்பயர், ‘இல்ல.. இல்ல.. நீங்கள் இருவரும் கேப்டன்கள்.. கேமை விளையாடுங்கள்’ என்று மேலும் கூறியுள்ளார். மீண்டும் பெய்ன், ‘நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.. வேறொன்றும் இல்லை’, என்று கூற, அம்பயரோ, ‘டிம் நீங்கள் கேப்டன்’ என்று உரக்கச் சொல்லியிருக்கிறார். 

 

அதை காதில் வாங்கிக்கொண்ட டிம் பெய்ன், கோலியிடம்  ‘கூலாகவே இருங்கள் விராட்’ என்று கூறி உரையாடலை முடித்துள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Tags : #VIRATKOHLI #TIM PAINE #AUSVIND #PERTHTEST #CRICKET #VIRAL