'மறுபடியும் இவங்களுக்கு இடம் இல்லையா'!...இரண்டு முக்கிய வீரர்களை கழற்றி விட்ட பிசிசிஐ?

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 24, 2018 03:58 PM
Dinesh Karthik and KL Rahul likely to be dropped from ODI and T20I

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இடம்பிடிப்பது கடினம் என,பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் செய்துகொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அதன் பின்பு ஒரு நாள் மற்றும்  டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கு பின் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

 

இந்நிலையில் ஆஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த 24 மணி நேரத்தில், பிசிசிஐயால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் அறிவிக்கப்பட இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு  இடம் கிடைப்பது கடினம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலும் நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படும் அணி தான்,அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் என கூறப்படுவதால்,தற்போது அறிவிக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியல்,ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.