இது ‘நோ பாலா?’ .. அம்பயர்களிடம் 8 நிமிடம் சண்டை போட்ட கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 23, 2018 04:31 PM
Umpire wrongly gives no ball, captain gets angry viral video

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே நடந்த டி20 போட்டியில் சரியான பாலுக்கு அம்பயர் ‘நோ பால்’ கொடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடுப்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்களை இலக்காக வைத்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி, அனைத்து விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி-20 தொடரை 2-1 என்கிற விகிதத்தில் கைப்பற்றியது. ஆனால் பலமுறை அம்பயர் தவறான முடிவுகளை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.


குறிப்பாக வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது, வெஸ்ட் இண்டீஸின் தாமஸ் 4 ஓவருக்கு பந்து வீசினார்.  அவர் வீசிய சரியான பாலை‘நோபால்’ என்று அம்பயர் அறிவித்ததால், உடனே கோபம் தலைக்கேறி வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் அம்பயர்களிடம் 8 நிமிடங்கள் வாக்குவாதம் செய்துள்ளார்.

Tags : #CRICKET #VIRALVIDEO #VIRALCLIP #WI #TWITTER