'கடைசி ரவுண்டுல தான் ஏலம் எடுப்பாங்கனு,எனக்கு முன்னாடியே தெரியும்'...கலங்கிய பிரபல வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 21, 2018 10:18 AM
Expected not to be picked up in first round, says Yuvraj Singh

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது முதல் சுற்றில் தன்னை யாரும் ஏலம் எடுக்க முன்வராதது,தான் முன்பே எதிர்பார்த்தது தான் என யுவராஜ் சிங் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது.ஒவ்வொரு அணிகளும் வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்தன.சில வீரர்களுக்கு ஜாக்பாட் கூட அடித்தது.அந்த வீரர்கள் கூட எதிர்பார்க்காத தொகையினை கொடுத்து சில அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுத்து,ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது.

 

இந்நிலையில் இந்தியாவின் அதிரடி வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங்கை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.ஒரு காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆடத்தினை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்,ஐபிஎல் அணிகளுக்கு செல்ல பிள்ளையாக திகழ்ந்தவர்.

 

இந்நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து கருத்து தெரிவித்த யுவராஜ் சிங் ''ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் போது முதல் சுற்றில் என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என எனக்கு முன்பே தெரியும்.இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கத்தான் அதிக போட்டி நிலவியது.நான் தற்போது என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன்'' என உருக்கத்துடன் தெரிவித்தார்.

Tags : #YUVRAJSINGH #IPL #CRICKET #IPL AUCTION 2019