'கோலி கத்துகிட்ட மொத்த வித்தையும்...இதுல மட்டும் தான் காட்டுனாரு...ஜெய்க்குறதுல இல்ல!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 21, 2018 11:18 AM
Tim Paine got the better of Virat Kohli in captaincy says Ian Chappell

இந்திய கேப்டன் விராட் கோலியின் முழு கவனமும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை வம்புக்கு இழுப்பதில் இருந்ததே தவிர,இந்திய அணியினை வெற்றி பெற வைப்பதில் இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் கடுமையாக தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளின் விளையாடி வருகிறது.அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியினை இந்திய அணி பதிவு செய்தது.ஆனால் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று,அதற்கு பழி தீர்த்து கொண்டது ஆஸ்திரேலிய அணி.

 

இந்நிலையில் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது தான்,கேப்டன் கோலியின் செயல் சர்வதேச அளவில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.போட்டியின் போது இந்திய கேப்டன் கோலிக்கும்,ஆஸ்திரேலிய கேப்டன் டிமிற்கும் நடந்த சலசலப்பு குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் கூறுகையில் "டெஸ்ட் போட்டிகளில் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.ஆனால் அவர் மைதானத்தில் நடந்து கொள்ளும் முறையினை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை.

 

அதே நேரம் பெர்த் டெஸ்டின் போது கோலியின் கவனம் முழுதும் டிம் பெயின் மீதே இருந்தது.அவரை எப்படி எல்லாம்  வம்பிழுக்கலாம்,என்பது குறித்தே கோலி எண்ணியது போன்று இருந்தது.ஆனால் அந்த விஷயத்தில் டிம் பெயின் அப்படியில்லை. அவரின் கவனம் முழுதும் வெற்றியின் மீதுதான் இருந்தது.பெயின் கேப்டன் பொறுப்பில் இருந்து தவறாமல் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து விட்டார்'' என சாப்பல் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #VIRATKOHLI #INDIA VS AUSTRALIA #TIM PAINE #IAN CHAPPELL