'மீண்டும் ‘டி-20’ அணிக்குள் வருகிறாரா 'தல'...எகிறும் எதிர்பார்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 24, 2018 12:12 PM
MS Dhoni selection certain for New Zealand T20 series

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்போது ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்நிலையில் 3 டி-20, மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும்,பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்று பயணத்தை முடித்து கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.இந்நிலையில் ஆஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய  அணியானது,அடுத்த 24 மணி நேரத்தில் பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது.

 

இதில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் தோனி இடம்பிடிப்பது உறுதியாகியுள்ள நிலையில்,நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் தோனி இடம் பிடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அவரது ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளார்கள்.

 

.