பட்ட பகலில் ஹெல்மெட் அணிந்தபடி கிளி ஜோசியரை வெட்டிக்கொன்ற நபர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 24, 2018 06:39 PM
Man kills Astrologer in a public for cheating women

திருப்பூரின்  குமரன் சாலையில் உள்ள பார்க் ரோட்டில்  கிளி ஜோசியம் பார்த்துவந்த ரமேஷ் என்பவரை ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டித் தாக்கி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருப்பூரின் பரபரப்பான சாலைதான் குமரன் சாலையில் உள்ள பார்க் ரோடு. இங்கு வழக்கமாக கிளி ஜோசியம் பார்த்துவந்தவர் ரமேஷ். இந்நிலையில் இன்று பகல் 12.45 மணி அளவில், அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அவரின் பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி வந்த ஒரு நபர் திடீரென ஆயுதம் கொண்டு ஜோசியர் ரமேஷை வெட்டித் தாக்கத் தொடங்கினார். ரமேஷ் கீழே விழுந்தும் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்த அந்த நபர், அங்கிருந்த கடை ஒன்றில் ஒரு நோட்டீஸை தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார். 

 

அந்த நோட்டீஸில், கிளி ஜோசியர் ரமேஷ், ஜோசியம் பார்க்கும் பேரில், நிறைய பெண்களை வசியம் செய்து ஏமாற்றியதால், பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருவர் என்றும், தனது காதலியும் இதில் பாதிக்கப்பட்டு பின்னர், அந்த ஜோசியருக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் அதனால் இக்கொலையை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பட்ட பகலில் கிளி ஜோசியக்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #TIRUPUR #MURDER #CRIME #ASTROLOGER #KILIJOSIYAM