'கோயில் பிரசாதத்தில் விஷம்'...11 பேர் உயிரிழந்த பரிதாபம்...காவல்துறை தீவிர விசாரணை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 14, 2018 10:32 PM
12 dead after eating temple food in Chamarajanagar

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட உடனே பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சம்பவ டத்திற்கு சென்று முதற்கட்டமாக பிரசாதத்தை ஆய்வு செய்தனர்.

 

இந்நிலையில் அடுத்த கட்ட ஆய்விற்காக பிரசாதத்தை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.அப்போது தான் உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அப்போது தான் கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வந்ததும்,அதில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் பிரசாதத்தில் விஷத்தை கலந்ததும் தெரியவந்தது.

 

இந்நிலையில் கோயில் பிரச்சனையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக,பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு அதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகவில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.