வகுப்பில் பயிலும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்த பொறியியல் மாணவனுக்கு கொடூரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 20, 2018 05:43 PM
student stabbed and honour killed for marrying girl of his class

மகாராஷ்டிராவில் பொறியியல் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இது ஆணவக் கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் பீட் எனும் ஊரில் வசித்துவந்த 25 வயது மதிக்கத்தக்க சுமித் சிவாஜிராவ் வாக்மாரே என்கிற இந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லுரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தவர்.   

 

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன் வகுப்பறையில் பயிலும் சக மாணவியான ஒரு பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டார். வீட்டை எதிர்த்து நிகழ்ந்த இந்த திருமணத்துக்கு பிறகு, கணவன் மனைவியாக இருவரும் மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது  இந்த இளைஞரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், கத்தியால் குத்தி தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.அதன் பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகின்றனர். 

Tags : #HONOUR KILLING #MURDER #CRIME #YOUNGSTERS #CASTE