நாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 18, 2018 05:12 PM
Man who tried to to save a dog is killed by his brother

மும்பையில் பக்கத்து வீட்டு நாய் ஒன்றை காப்பாற்ற முயன்றதற்காக, உடன்பிறந்த தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர், ஹனுமந்தா கோலீகார் என்பவர்.

 

50 வயது மதிக்கத்தக்க இந்த நபர், தனது தம்பியான சிவா கோலீகார் என்பவரை கொலை செய்துள்ளார். காரணம் எதுவுமில்லை, பக்கத்து வீட்டாரின் நாய் குட்டி ஒன்றை காப்பாற்றிய குற்றத்துக்காகத்தான் சிவா கொல்லப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஏதோ காரணத்துக்காக பக்கத்து வீட்டாரின் நாயினை தாக்கச் சென்ற ஹனுமந்தாவை, அவரது தம்பி தடுக்க முயன்றுள்ளார். ‘நான் தாக்கச் செல்லும் நாயை நீ காப்பாற்ற முயற்சிக்கிறாயா?’ என்றபடி, அண்ணன் ஹனுமந்தா, தன் தம்பி சிவாவை பிடித்து தள்ளியிருக்கிறார். 

 

கிட்டத்தட்ட மாடியில் இருந்து விழுந்த சிவா கோலீகார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதை அடுத்து ஹனுமந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #DOG #BIZARRE #MURDER #CRIME #MUMBAI