12 அடி உயர சுவரைத் தாண்டி வீசப்பட்ட குட்டி நாய்க்குட்டிகள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 14, 2018 05:47 PM
merciless man throws three puppies over a 12-feet wall

நாய்க்குட்டிகளை பார்த்தால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அவற்றின் அருகில் நெருங்க சஞ்சலப்படுபவர்கள் இருக்கலாம். ஆனாலும் அவற்றை அள்ளிக் கொஞ்ச நினைப்பவர்களாகவே இருக்கக் கூடும். அத்தகைய நாய்க்குட்டிகளை உயரமான சுவருக்கு மேல், தூக்கி வீசிய உருத்தலான சம்பவத்தை ஒருவர் செய்துள்ளார்.

 

மும்பை மஹாராஷ்டிராவில் உள்ள சுர்பான் அந்தேரி அருகில், சாகர் சிட்டியில் 3 நாய்க்குட்டிகளை 12 அடி உயரமுள்ள சுவரைத் தாண்டி வீசிய கொடூரச் செயலுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஹவுசிங் சொசைட்டியில் வழக்கமாக நாய்க்குட்டிகளுக்கு உணவளிப்பவர் நாய்க்குட்டிகள் காணாமல் போனதால் தேடியுள்ளார். 

 

இந்நிலையில் மனிதத் தன்மையற்ற இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து,  ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டு, இத்தகைய செயலைச் செய்த வீட்டு வேலை செய்யும் ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

 

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 நாய்க்குட்டிகளில் ஒரு நாய்க்குட்டிக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், மற்ற நாய்க்குட்டிகள் பாதுகாப்பாகவும் உள்ளன.

Tags : #BIZARRE #MERCILESSMAN #PUPPIES