திருமணமான ஒருவரை, காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா? வலுக்கும் போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 18, 2018 06:32 PM
man sets fire girl ablaze using petrol because of one sided love

உத்ரகாண்ட் அருகே உள்ள, பௌரி கர்வால் எனும் ஊரில், 31 வயதான ஓட்டுநரான மனோஜ் சிங் என்பவர், தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

 

அடிக்கடி அம்மாணவியை சந்தித்து தன் காதலைச் சொல்லி வற்புறுத்தவும் செய்துள்ளார். அப்படி இந்த முறை அந்த மாணவியிடம் காதலை மிகவும் வலுக்கட்டாயமாக சொன்னபோது, மாணவி காதலை ஏற்க மறுத்ததை அடுத்து, அம்மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு மனோஜ் ஓடியுள்ளார். 

 

ஆள், அரவம் இல்லாத அந்த இடத்தின் வழியே வந்த  வேறு ஒருவர், மாணவியின் சத்தம் கேட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மாணவி, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

பின்னர் தலைமறைவான மனோஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் நண்பர்கள், உத்ரகாண்ட் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : #FIREACCIDENT #COLLEGESTUDENT #CRIME #ONESIDELOVE #GIRL