'ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த சர்ப்ரைஸ்'...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 26, 2018 03:53 PM
Sachin Turns Santa Claus for Underprivileged Children on Christmas

இயேசு பிரான் அவதரித்த தினத்தை,உலகமுழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள்.நேற்று கிறிஸ்துமஸ் விழா படு உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.கிறிஸ்துமஸ் தினம் என்றாலே சாண்டா கிளாஸ் எனப்படும்,கிறிஸ்துமஸ் தாத்தா தான் அனைவரின் நினைவிற்கு வரும்.அவர் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும்,இனிப்புகளையும் வழங்கி மகிழ்வர்.

 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ''அஷ்ராய் என்ற குழந்தைகள் நல மையத்திற்கு சென்று,அங்கிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினார்.

 

மேலும் அங்கிருந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த சச்சின் அவர்களுடன் நடனமாடினார்.இறுதியில் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #SANTA CLAUS #UNDERPRIVILEGED CHILDREN #CHRISTMAS