'ஓப்பனிங்கு நீங்க ரெண்டு பேரும் வேண்டாம்'...தூக்கப்பட்ட வீரர்கள்..யார் அந்த புது ஓபனிங் பாட்னர்ஷிப்?

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 25, 2018 08:09 PM
India leave out KL Rahul, Murali Vijay for Opening Partnership

மோசமான ஆட்டத்தின் காரணமாக,இந்திய துவக்க வீரர்களான ராகுல், முரளி விஜய் ஆகிய இருவரும் நீக்கப்பட்டதால் யார் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும்  மூன்றாவது டெஸ்ட் போட்டி, ‘பாக்சிங் டே’வான நாளை மெல்போர்னில் துவங்குகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.போட்டியின் போது கோலியின் மோசமான செயல்கள்,இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் போன்றவைகள் கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

இந்நிலையில்,துவக்க வீரர்களான ராகுல் மற்றும் முரளி விஜயின் மோசமான ஆட்டம் காரணமாக இருவரும் நீக்கப்பட்டதால் துவக்க ஆட்டக்காரர்களாக யார் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹனுமா விஹாரி களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #KLRAHUL #CRICKET #MURALI VIJAY