'நான் நிச்சயமா 200 ரன்கள் அடிப்பேன்'...நம்பிக்கையோடு சொல்லும் அதிரடி வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 25, 2018 07:29 PM
Double Century Ahead Of Melbourne Test says Rahane

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில்,நிச்சயமாக இரட்டை சதம் அடிப்பேன் என,இந்திய துணை கேப்டன்  ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அதன் பின்பு ஒரு நாள் மற்றும்  டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்நிலையில் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

 

இந்நிலையில் போட்டி குறித்து பேசிய இந்திய துணை கேப்டன்  ரஹானே "மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை உணர்ந்து ஆடினால்  நிச்சயமாக என்னால் இரட்டை சதம் அடிக்க முடியும்.நிச்சயமாக ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடுவது என்பது கடும் சவாலான பணி.இருப்பினும் இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைக்கும் பட்சத்தில் 3,4,5 வதாக களமிறங்கும் வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும்.

 

இந்த முறை இந்திய வீரர்கள் நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.நானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 அல்லது 200 ரன்களை எடுப்பதற்கு முயற்சி செய்வேன்''என தெரிவித்தார்.

Tags : #BCCI #CRICKET #AJINKYA RAHANE