'ஓப்பனிங்கு இவர் இறங்குனா தான்...'செம மாஸா இருக்கும்'...ட்விட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 25, 2018 08:45 PM
Twitterati wants Rohit Sharma to open with Mayank Agarwal

மெல்போனில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்,துவக்க வீரராக ரோஹித் ஷர்மா களமிறங்க வேண்டும் என ரசிகர்கள்,ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் 'பாக்சிங் டே' என ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது,ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்திய வீரர்கள் காயமடைந்திருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

மேலும்  துவக்க வீரர்களான ராகுல், முரளி விஜய் இருவரும் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹனுமா விஹாரி களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்டில், ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.ஒரு நாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.அவர் இதுவரை மிடில் ஆர்டரில் மட்டுமே களமிறங்கியுள்ளார். அதனால் அவர் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு மிகக் குறைவு.இருப்பினும் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா நிச்சயம்  துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #CRICKET #TWITTER #ROHIT SHARMA #MAYANK AGARWAL #IND VS AUS 3RD TEST