'மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த கிரிக்கெட் வீரர்'...பேட்டிங் செய்த போது நிகழ்ந்த சோகம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 26, 2018 11:18 AM
Cricket Player dies heart attack during a cricket match in Mumbai

மாரடைப்பு காரணமாக மும்பை கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வைபவ் கேஸ்கர் என்பவர்,மத்திய மும்பையின் பண்டப் பகுதியில் நடைபெற்ற டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்று  விளையாடி வந்தார்.அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வைபவ் கேஸ்கர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள்,அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

மருத்துவமனையில் வைபவ் கேஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.மேலும் அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினார்கள்.வைபவ் கேஸ்கர் ஒரு சிறந்த வீரர் என மும்பை கிரிக்கெட் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.மைதானத்தில் வைபவ் கேஸ்கர் திடீரென மரணமடைந்த சம்பவம் அவரது சக வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRICKET #MUMBAI #HEART ATTACK #VAIBHAV KESARKAR