'நியூ இயர்'னா டபுள் சந்தோசம்'...'தல' ஸ்டைலில் வாழ்த்திய மதுரை காவல்துறை...வைரலாகும் மீம்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 01, 2019 12:02 PM
Madurai City Traffic Police wishes New Year in Thala Ajith style

பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட வலியுறுத்தி,மதுரை மாநகர காவல்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

 

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எந்த வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாதவாறு காவல்துறையின் சார்பாக பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும்,பல்வேரு விழிப்புணர்வு பதாகைகளும்,பிரச்சாரங்களும் காவல்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும்.

 

சிறு சிறு விபத்துக்கள் நடந்தாலும் உயிரிழப்புக்கள் நடைபெறாமலிருக்க இழப்பில்லா புத்தாண்டு என்ற இலக்கோடு தான் காவல்துறை செயல்படுகிறது.அந்த வகையில் பாதுகாப்பான புத்தாண்டு என்பதை குறிக்கும் வகையில் மதுரை காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட மீம்ஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

தல அஜித் நடித்து,வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் விஸ்வாசம் படத்தில் தல அஜித் பேசும் வசனத்தை மையப்படுத்தி "பாதுகாப்பான நியூ இயர்'னா டபுள் சந்தோசம்''என வெளியிடப்பட்டிருக்கும் அந்த மீம்ஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.