'மண்ணுக்கு ஒண்ணுனா துள்ளுவோம்'.. புதிய ரெக்கார்டுகளை படைக்கும் வேட்டிகட்டு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 15, 2018 07:51 PM
#VettiKattu : Viswasam second single track released

மதுரைக்காரராக தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.கடந்த திங்களன்று இப்படத்தின் முதல் டிராக் 'அடிச்சித்தூக்கு' பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

 

தொடர்ந்து  இப்படத்தின் 2-வது சிங்கிள் டிராக் 'வேட்டிகட்டு' இன்று மாலை 7 மணிக்கு வெளியாகியது. இதனையொட்டி #VettiKattu, #Viswasam2ndSingle ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டடித்து வருகின்றன.

 

இந்த நிலையில் இப்படத்தின் பாடல்களைக் கைப்பற்றிய லஹரி மியூசிக் நிறுவனம் வேட்டிகட்டு பாடலின் சாதனைகளை சற்றுமுன் பகிர்ந்துள்ளது. அதன்படி 51 நிமிடங்களில் வேட்டிகட்டு பாடல்  200 ஆயிரம் லைக்குகள் + 10,00,000 பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

 

வேட்டி வேட்டி கட்டு... சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக் கட்டு...