தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தினைக் கைப்பற்றிய 'பிரபல' நிறுவனம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 07, 2018 10:30 AM
Sun TV Acquires the satellite rights of Viswasam

அஜித்,நயன்தாரா மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்'  பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. 

 

மதுரை மாவட்டத்தின் காவல் தெய்வமாக விளங்கும் 'தூக்குதுரை' என்னும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து இப்படத்தின் டீசர், சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.