'ஆர்வம்' இருக்கலாம் அதுக்காக இப்படியா?.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 28, 2018 03:44 PM
Thala Ajith\'s recent video goes viral

அஜித் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அஜித் தற்போது தக்க்ஷா குழுவினரின் அடுத்த ட்ரோன் ப்ராஜெக்ட் விஷயமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். 

 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக 'தல' ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பான வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் அஜித் நடந்து வரும்போது திடீரென அவருக்கு குறுக்கே கையை நீட்டி அந்த ரசிகர் புகைப்படம் எடுக்கிறார்.

 

இதனைப் பார்க்கும் அஜித் புகைப்படம் எடுத்த பின்னர் நன்றி என சொல்லி, அந்த இடத்தை விட்டு அகலுவது போல காட்சிகள் உள்ளன.