ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் 'தல அஜித்' ஆலோசனை.. கொண்டாடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 28, 2018 12:07 PM
Thala Ajith went Germany to meet Vario Helicopter\'s MD

பைக்,கார் மட்டுமின்றி ட்ரோனை இயக்குவதிலும் அஜித் சிறந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் மாணவர்களின் தக்க்ஷா குழுவினருக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

 

இந்த குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Medical Express 2018 UAV Challenge போட்டியில் கலந்து கொண்டு 2-வது பரிசு பெற்றது. தற்போது 'விஸ்வாசம்' படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தக்க்ஷா குழுவினருடன் இணைந்து அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அஜித் ஆலோசனை செலுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் தக்க்ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியில் வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன், அஜித் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக, அஜித் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.