கஜா புயலுக்கு 'தல அஜித்' வழங்கிய நிவாரணத்தொகை இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 24, 2018 08:28 PM
Thala Ajith donates 15 lakhs for #GajaCycloneRelief

டெல்ட்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலால் தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு பல்வேறு நடிக,நடிகையரும் தங்களால் முடிந்த தொகையை நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் நடிகர் அஜித் ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பொது  நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதுதொடர்பான விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக, பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டினை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.