'அடிச்சித்தூக்கு #வேட்டிகட்டு'.. விஸ்வாசத்துடன் 'தெறிக்க' விடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 15, 2018 05:45 PM
#Vettikattu is now trending in Social Media\'s

தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மதுரைக்காரராக அஜித் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

 

கடந்த திங்களன்று இப்படத்தின் முதல் டிராக் 'அடிச்சித்தூக்கு' பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

 

இந்தநிலையில் இப்படத்தின் 2-வது சிங்கிள் டிராக் 'வேட்டிகட்டு' இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தல ரசிகர்கள் #வேட்டிகட்டு #vettikattu ஹேஷ்டேக்கை வேர்ல்ட் லெவலில் டிரெண்டாக்கி வருகின்றனர்.