'விஸ்வாசம் டீசர்' எப்போது? இயக்குநர் சிறுத்தை சிவாவின் 'எக்ஸ்குளூசிவ்' பதில் இதோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 16, 2018 06:35 PM
#BehindWoodsGoldMedalsAwards2018: When released Viswasam Teaser? read

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

 

இதில் விஸ்வாசம் இயக்குநர் சிவா கலந்து கொண்டு 'பரியேறும் பெருமாள்' புகழ் கதிருக்கு 'பெஸ்ட் ஆக்டர் கிரிடிக்ஸ் சாய்ஸ்' விருது வழங்கினார். அப்போது அவரிடம் விஸ்வாசம் டீசர் எப்போது? என கேள்வி எழுப்பப்பட்டது.

 

பதிலுக்கு சிவா,'' இன்னும் 10 நாளில் விஸ்வாசம் டீசர் வெளியாகும்,'' என பதிலளித்தார். இதனை வைத்துப் பார்க்கும்போது டிசம்பர் 25 அல்லது 26  தேதியில் கிறிஸ்துமஸ் விருந்தாக விஸ்வாசம் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தூக்கு துறைனா அலப்பறை.. தூக்குதுறைனா அடாவடி..