'ஆளப்போறான் தமிழன்' சிம்புவா? சீமானா?.. பிரபல இயக்குநரின் பதில் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 16, 2018 04:46 PM
Behindwoods Gold Medals 2018: Pa.Ranjith talks about his next movie

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

 

முதல் விருதாக சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்காக இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித், திரு.சகாயம் ஐஏஎஸ் கையால் பெற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து அவர் பேசுகையில்,''பரியேறும் பெருமாள் ரொம்ப ஸ்பெஷலான திரைப்படம்.இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு. நமக்குள் இருக்கக்கூடிய முரண்களை இப்படம் உடைக்கும் என நினைக்கிறேன். இந்த விருதை சகாயம் ஐயா கிட்ட வாங்கினதை பெருமையாக நினைக்கிறேன்.

 

என்னுடைய அடுத்த படமான பிர்சா முண்டா மிக முக்கியமான அரசியல் திரைப்படமாக இருக்கும். இந்தியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்,''என்றார்.

 


அவரிடம் ஆளப்போறான் தமிழன் யார்? சிம்புவா இல்லை சீமானா? என நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் விக்னேஷ்காந்த், ரியோ கேள்வி எழுப்பினர். பதிலுக்கு ரஞ்சித், ''சிம்புவை விட சீமான் களத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார். அதனால் ஆளப் போறான் தமிழன் சீமான் தான்,'' என தெரிவித்தார்.

Tags : #BEHINDWOODSEXCLUSIVE #BEHINDWOODSGOLDMEDALS2018 #PARANJITH