டீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 07:52 PM
police officer was caught on camera assaulting a tea vendor viralvideo

திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிக்கச் சென்ற காவல் அதிகாரி, டீ நன்றாக இல்லை என்று, டீ கடைக்காரரை தாக்கியுள்ள சம்பவம் விஸ்வரூபமாக உருவெடுத்து இணையத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.


தகவல்களின்படி, இங்குள்ள டீ கடைக்கு, டிஎஸ்பி ஒருவர் தன்னுடைய பாதுகாவலர் மற்றுமொரு காவலருடன் டீ குடிக்கச் சென்றுள்ளார். தனது போலீஸ் வாகனத்தின் அருகே நின்றபடி டீ அருந்திக்கொண்டிருந்த டிஎஸ்பி திடீரென டீ மாஸ்டரை அழைக்கிறார். அவரும் டீ கடையில் இருந்து டிஎஸ்பியிடம் வர, உடனே டிஎஸ்பி அந்த மாஸ்டரை கன்னத்தில் அறைந்து ஏதோ பேசுவதாக அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது.


டீ நன்றாக இல்லை என்பதால் காவல்துறையினர் அறைந்ததாக டீ கடை தரப்பிலும், காவல்துறையினர் ஓசியில் டீ குடிக்க வந்துவிட்டதாக கமுக்கமாக கமெண்ட் அடித்ததால் டீக்கடை மாஸ்டர் அறையப்பட்டதாக டிஎஸ்பி தரப்பிலும் கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தை பற்றிய முழுமையான விளக்கம், காவல்துறை தரப்பில் இருந்து வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Tags : #TAMILNADU #POLICE #TEASHOP #TEAVENDOR #DSP #BADTEA