புதுவருஷ நாளில் இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 07:21 PM
TeamIndia, Australia at the Australian Prime Minister\'s residence

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் 3 ஆட்டங்களில் முன்னிலை வகிக்கும் இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவை சிட்னியில் நாளை மறுநாள் (ஜனவரி 3-ஆம் நாள்) எதிர்கொள்ள உள்ளது.


இந்த போட்டித் தொடரில் இந்தியாவின் பவுலர்களின் அணிவகுப்புக்கு முன்னாள் ஆஸ்திரேலியாவின் நிலை கஷ்டம்தான் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் முன்னதாக ட்வீட் போட்டிருந்தார். அதே நேரம் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவை எதிர்கொள்ள கடுமையாக பயிற்சி பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அதனால் புத்தாண்டு என்று கூட பாராமல், ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் புத்தாண்டு சிறப்பு நாளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடச் சென்ற இந்திய அணியை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருந்து உபசரிப்புகள் ஏற்பாட்டுடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய வீரர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

Tags : #AUSVIND #BCCI #TEAMINDIA #VIRATKOHLI #MELBOURNETEST #SYDNEYTEST #CRICKET #NEWYEAR2019