'நானும்,மனைவியும் சினிமாக்கு போகும் போது...நீ தான் குழந்தைகளை பாத்துக்கணும்...வம்பிழுக்கும் ஆஸி. கேப்டன்:வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 29, 2018 11:49 AM
Tim Paine invites Rishabh Pant to play BBL

பேட்டிங் செய்துக்கொண்டிருந்த ரிஷப் பந்திடம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் வம்பிழுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் சரமாரியாக விக்கெட்டுகளை இழந்த நிலையில்,ரிஷப் பந்த் களமிறங்க நேரிட்டது.அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தொடர்ந்து ரிஷப் பந்திடம் வம்பிழுத்து கொண்டிருந்தார்.

 

கேப்டன் டிம் பெய்ன் வம்பிழுத்த ஆடியோ அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.அதனை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றன.அதில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியிருப்பதாவது "ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார்.நங்கள் உன்னை (ரிஷப் பந்த்தை) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்கிறோம்.அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.

 

ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீடித்துக்கொள்.ஹோபார்ட் மிக அழகான நகரம்.அங்கு இவருக்கு நல்ல வாட்டர்ஃபிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம்.நான் என் மனைவியை சினிமாக்கு அழைத்துச் செல்லும் போது,நீ என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு டிம் பெய்ன் கிண்டலடித்திருக்கிறார்.தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : #CRICKET #RISHABH PANT #TIM PAINE