'கெட்ட பையன் சார் இந்த புஜாரா'...வலுவான நிலையில் இந்தியா!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 27, 2018 10:46 AM
Pujara hundred grinds down Australia

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில், புஜாராவின் அசத்தலான சததினால் இந்திய அணி வலுவான நிலையினை அடைந்துள்ளது.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.‘பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.கோலி (47), புஜாரா (68) அவுட்டாகாமல் நிதானமாக ஆடி வந்தனர்.ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

 

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார்.கேப்டன் கோலியும் தனது பங்களிப்பை கொடுத்து அவுடாகி வெளியேறினார்.புஜாராவின் அசத்தலான சததினால் இந்திய அணி வலுவான இலக்கினை அடைந்துள்ளது.

Tags : #CRICKET #PUJARA #AUSTRALIA