'தனியா மாட்டுனா இப்படியா பண்ணுவீங்க'...ஹிட்மேனை வரிசைக்கட்டி கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்கள்...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 27, 2018 11:40 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில்,இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவை,கேப்டன் பெய்ன் உள்ளிட்ட வீரர்கள் கலாய்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

If Rohit hits a six I’ll support Mumbai Indians Tim Paine viral video

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.‘பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.கோலி (47), புஜாரா (68) அவுட்டாகாமல் நிதானமாக ஆடி வந்தனர்.ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார்.

 

இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின், இந்திய அணி,முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை,ஆஸ்திரேலிய கேப்டனும் அந்த அணியின் விக்கெட் கீப்பருமான பெய்ன் ரோஹித் ''நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன் என ரோஹித்தை கலாய்தார்கள்''.வீரர்கள் பேசிக்கொண்ட உரையாடல் ஸ்டெம்ப் மைக்கில்  பதிவாகி இருந்தது.அது தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #MUMBAI-INDIANS #INDIA VS AUSTRALIA #ROHIT SHARMA #TIM PAINE