'இந்திய கிரிக்கெட்டின் ஹிட் மேனுக்கு...அப்பாவாக ப்ரோமோஷன்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 31, 2018 04:17 PM
Rohit Sharma blessed with a baby girl

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கடந்த 2015 டிசம்பர் 13ம் தேதி,ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்தார்.ரோஹித் ஷர்மா விளையாடிய பல போட்டிகளில் அவர் உடனிருந்த அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.இந்நிலையில் ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

தற்போது ஆஸ்திரேலியவில் இருக்கும் ரோஹித் ஷர்மா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.இதனால் அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரோஹித் ஷர்மாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #MUMBAI-INDIANS #CRICKET #ROHIT SHARMA #RITIKA SAJDEH