'தல தோனி'யின் ரெகார்டை...பிரேக் செய்த இந்திய வீரர்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 31, 2018 02:52 PM
Rishabh Pant breaks Dhoni wicket-keeping record

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். 

 

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை என்ற பெயருடன் களமிறங்கிய இந்திய அணிக்கு,நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளுமே கடும் சவாலாக அமைந்தது.அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை ருசித்தது.ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இரு அணிகளும் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியானது 'பாக்ஸிங் டே'நாளில் தொடங்கியது.இதில் இந்திய அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த டெஸ்ட் போட்டியின் போது,இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்ததோடு,தோனியின் முந்தைய சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

 

மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த விக்கெட்  கீப்பர் என்ற சாதனையை படைத்ததோடு,அறிமுக ஆண்டிலேயே அதிக கேட்சுகளைப் பிடித்த கீப்பர் என்ற சாதனையையும் படைத்தது முதலிடம் பிடித்துள்ளார்.

Tags : #MSDHONI #CRICKET #RISHABH PANT #INDIA VS AUSTRALIA