'அங்கே என்ன தெரிகிறது'.. புதிய கெட்-அப்பில் தோனி, ஹர்திக் பாண்ட்யா.. ட்ரெண்டிங் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 31, 2018 11:49 AM
MS Dhoni and Hardik Pandya performs in news advertisement viral video

இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான தல தோனி மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா இருவரும் இணைந்து நடித்துள்ள விளம்பரம் ஒன்று பிரபலமாகி வருகிறது. தல என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் தோனியின் அன்புக்கு பாத்திரமானவர் ஹர்திக் பாண்ட்யா. இருவரையும் அநேகமான பொது நிகழ்ச்சிகளிலும் தனித்த சந்திப்புகளிலும் ஒன்றாகக் காண முடியும்.


இந்நிலையில் தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் இணைந்து நடித்துள்ள விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் பாமரத் தனமான இரண்டு நண்பர்கள் மரத்தின் மீது அமர்ந்து தூரத்தில் இருக்கும் மைதானம் ஒன்றில் நடக்கும் கிரிக்கெட் போட்டியினை பைனாகுளர் வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின் இருவரும் ஒரு பேசிக்கொள்கின்றனர். இறுதியில் விளம்பரத்துக்கான கருத்து வருகிறது.


தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்த ஸ்டார் தொலைக்காட்சி குழும நிறுவனங்களின் சேனல்களை டிடிஎச்சில் பார்ப்பதற்கான ‘ஸ்டார் வேல்யூ பாக்கேஜ்’ பற்றிய விளம்பரம்தான் அது.  ஆனால், பீகார் மொழியில் உருவாகியிருக்கும் இந்த விளம்பரத்தில் தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் போஜ்பூரி மொழியில் பேசி நடித்துள்ளனர்.  பிகாரியை பூர்வீகமாக கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், தோனியும் ஹர்திக் பாண்ட்யாவும் மிக சிறப்பாக பேசி நடித்திருப்பதாக ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளதை அடுத்து இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

Tags : #ADD #MSDHONI #HARDIKPANDYA #CRICKET #MATCH #VIRALVIDEO