'நான் பார்த்து பயப்படுற ஒரே ஆளு...இவர் மட்டும் தான்'...கோலி ஓப்பன் டாக்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 31, 2018 11:24 AM
I cant face Jasprit Bumrah In Test Matches says Virat Kohli

நான் எல்லா பௌலர்களையும் எதிர்கொள்வேன்,ஆனால் பும்ராவின் பௌலிங்கை மட்டும் எதிர்கொள்ள மாட்டேன் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை என்ற பெயருடன் களமிறங்கிய இந்திய அணிக்கு,நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளுமே கடும் சவாலாக அமைந்தது.அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை ருசித்தது.ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இரு அணிகளும் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியானது 'பாக்ஸிங் டே'நாளில் தொடங்கியது.இதில் இந்திய அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த,இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,இந்திய அணியின் வெற்றிக்கு பௌலர்கள் தான் முக்கிய காரணம் என தெரிவித்தார்.

 

இதிலும் குறிப்பாக பும்ராவை பாராட்டி பேசிய கோலி 'நமது பௌலர்கள் தான் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.அதிலும் குறிப்பாக பும்ராவின் பங்களிப்பு மிக பெரியது.நான் எல்லா பௌலர்களையும் எதிர் கொள்வேன்.ஆனால் பெர்த் போன்ற ஆடுகளத்தில் பும்ராவின் பௌலிங்கை எதிர் கொள்வதற்கு எனக்கு கொஞ்சம் பயம் தான் என சுவாரசியமாக தெரிவித்தார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #BCCI #JASPRIT BUMRAH