‘இப்ப என்ன சொல்றீங்க’.. பெய்னின் சவாலை செய்துகாட்டிய ரிஷப்.. வைரல் புகைப்படம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 06:44 PM
Rishabh pant meets tim paine\'s challenge photo goes viral on air

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் விடுத்திருந்த சவாலை, இந்திய டெஸ்ட் அணியின் வீரர் ரிஷப் பாண்ட் செய்துகாட்டியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் 3 ஆட்டங்களில் முன்னிலை வகிக்கும் இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவை சிட்னியில் எதிர்கொள்ள உள்ளது.

 

முன்னதாக மெல்போர்ன் ஆட்டத்தின்போது ரிஷப் பாண்ட்டினை டிம் பெய்ன் வம்பிழுத்தார். அதில், ‘தோனி வந்ததும் உன்னை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியதால், பிக் பாஷ் லீக் அணியில் சேர்த்துவிடட்டுமா’ என்றும்,  ‘என் மனைவியுடன் சினிமாவுக்கு செல்ல வேண்டும், ஆக என் குழந்தையை பார்த்துக்கொள்கிறாயா? ’ என்றும் கேட்டார். பதிலுக்கு ரிஷப் பாண்ட்டும் கிண்டல் அடித்திருந்தார்.

 

இந்த நிலையில், டிம் பெய்ன் சொன்னதுபோல், பெய்னின் குழந்தையை ரிஷப் பாண்ட் தன் கையில் வைத்திருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் டிம் பெய்னின் ஒரு குழந்தையை பெய்னின் மனைவியும் இன்னொரு குழந்தையை, ரிஷப் பாண்ட்டும் தத்தம் கைகளில் ஏந்தியபடி நிற்கின்றனர்.

 

இதன் மூலம், ‘குழந்தையை பார்த்துக்கொள்கிறாயா’ என கேட்ட டிம் பெய்னிடம் தன்னால் ஒரு குழந்தையை சிறப்பாகவே பார்த்துக்கொள்ள முடியும் என சொல்ல  வருகிறாரா ரிஷப் என்று ரசிகர்கள் கமண்ட் அடித்து வருகின்றனர். எனினும் பெய்னுக்கு ரிஷப் கொடுத்த பதிலடியாகவும் இந்த போட்டோ இணையத்தில் வலம் வருகிறது.

Tags : #CRICKET #INDIA #TEAMINDIA #TIMPAINE #RISHABHPANT #AUSVIND #SYDNEYTEST #MELBOURNETEST