9 வயது மகனை கொன்ற கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்..பரபரப்பு சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 04:04 PM
woman kills his affair after he killed her 9 year old son - bizarre

பெற்ற மகனை கொன்றதால் தன் கள்ளக் காதலனை, பெண் ஒருவர் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்துவந்த கார்த்திகேயன் மஞ்சுளா தம்பதியர்க்கு 9 வயதில் ரித்தீஷ் சாய் என்று ஒரு மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் தன் குடும்பத்துக்கு தெரிந்தவரான நாகராஜன் என்பவருடன் மஞ்சுளா கள்ளக் காதலில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் மஞ்சுளாவின் கணவர் கார்த்திகேயனுக்கு தெரியவர, அவர் நாகராஜனை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. 

 

இதற்கிடையே நாகராஜன் கார்த்திகேயன் வீட்டில் இருந்து நகையைத் திருடிக்கொண்டு ஓடியதாக கார்த்திகேயன் நாகராஜன் மீது போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் சிறுவன் ரித்தீஷை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சாக்கில் தன்னுடன் கூட்டிச் சென்று கொலை செய்துள்ளார். 

 

இதனையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் தனக்கு நிம்மதியில்லாத வாழ்வை தந்த கார்த்திகேயனையும், தன் குழந்தையை கொன்ற நாகராஜனையும் கொல்வதற்காக மஞ்சுளா பணம் கொடுத்து ஒரு கும்பலிடம் துப்பாக்கி வாங்கியுள்ளார். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்றறிந்ததும், அவர்களின் மீது மோசடி புகார் அளித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இதற்கிடையே ஜாமீனில் வெளிவந்த நாகராஜன், மஞ்சுளா தன்னை கொன்றுவிடுவார் என்று பயந்து திருவண்ணாமலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். அப்போதுதான் கூலிப்படை ஒன்று ஆட்டோவில் வந்து நாகராஜனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளது. 

 

அதை விசாரித்த காவல்துறையினர் நாகராஜனுடன் முன்விரோதத்தில் இருந்த மஞ்சுளா மீது சந்தேகப்பட்டுள்ளனர். இதை அறிந்த, மஞ்சுளாவும் அவரது நண்பர்களும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : #MURDER #CRIME #AFFAIR #BIZARRE #WIFE